ananthsambavar.blogspot.com/?m=1

சனி, 15 மே, 2021

அயோத்திதாசரின் பூர்வ பௌத்தம்

இரா.வினோத் அவர்களின்  அயோத்திதாசரின் பவுத்தம்  பதிவில் இருநது 

நான் முதன் முதலாக பவுத்தர்களை சந்தித்தது கோலார் தங்கவயலில் தான். அவர்களை பார்த்ததும் கடும் அதிர்ச்சி. அதுவரை பவுத்தர்கள் என்றால் திபெத்தியர்களைப் போல இருப்பார்கள். காவி உடை உடுத்தி, மொட்டை அடித்திருப்பார்கள் என எல்லாரையும் போல நம்பிக் கொண்டிருந்தேன். 


ஆனால் தங்கவயல் பவுத்தர்கள் என்னைப் போல இருந்தார்கள். அதிகம் படித்தவர்களாக இருந்த போதும் அழகுத் தமிழ் பேசினார்கள். அதை விட அழகாக ஆங்கிலம் பேசினார்கள். அவர்கள் அம்பேத்கரைப் பின்பற்றி மதம் மாறியவர்கள் இல்லை. பூர்வீக பவுத்தர்கள். அவர்களின் மூதாதையரும் பவுத்தர்கள். என்னால் நம்பவே முடியவில்லை. அவர்களின் நடை உடை தோரணையை பார்த்து அதிர்ச்சி அடையாமலும் இருக்க முடியவில்லை.


'நீங்க எப்படி புத்திஸ்ட் ஆனிங்க?'னு கேட்ட போது அவர்கள் மிகுந்த மதிப்போடு உச்சரித்த பெயர், 'துரையார்'. பண்டிதமணி ஜி.அப்பாத்துரையாரை தங்கவயல் பெரியவர்கள் இன்றும் உயிர் சிலிர்க்க அப்படி தான் அழைக்கிறார்கள். அது அன்பு, நன்றி, பெருமிதம், உச்சபட்ச மரியாதையின் வெளிப்பாடு.


தென்னிந்திய பவுத்த சங்கத்தில் அயோத்திதாசருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் ஜி.அப்பாத்துரையார். பண்டிதருக்கு பின் தமிழன் இதழை தொடர்ந்து நடத்தியதிலும், பவுத்தத்தை பரப்பியத்திலும் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தனித்துவம் மிக்க ஆளுமை. தமிழ் பண்டிதர், சிந்தனையாளர், சித்தமருத்துவர், எழுத்தாளர், பேச்சாளர், பன்மொழி வித்தகர் என பல முகங்கள் கொண்டவர். நவீன தமிழ் சமூகத்தின் சீர்திருத்தவாதிகளின் பட்டியலில் முதல் வரிசையில் இடம்பெற வேண்டியவர் ஜி.அப்பாத்துரையார்.


1914ல் அயோத்திதாசர் மறைந்த பின் தான் வசித்த சாம்பியன் ரீஃப் பகுதியில் பவுத்த சங்கம் நிறுவினார். நான் முதன் முதலாக பார்த்த பவுத்த சங்கம் அது தான். அரச மரத்தின் நிழலில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. புத்தர், அப்பாத்துரையார், அம்பேத்கர் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. 

நூற்றாண்டுகளை கடந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அந்த சங்கம் பெரிய கட்டிடமாக உருமாற்றப்பட்டிருக்கிறது. எழுதப்படாத வரலாறை சுமந்து நிற்கும் அக்கட்டிடத்தில் போய் நின்றாலே மனம் கணமாகி விடுகிறது. 



ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன் நானும் பிரபுவும் தேடி அலைந்து, முதல் முறையாய் இந்த பார்த்த கணம் கண் கலங்கி நின்றேன். கடந்த ஆண்டு அதை பார்த்த ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கமும் கண் கலங்கி நின்றார். வகுப்பெடுத்து பழக்கப்பட்ட அவருக்கு வார்த்தைகள் வரவில்லை.

அதுவொரு லட்சிய பேரியக்கத்தின் சாதனைகள் நிகழ்த்தும் உன்னதமான உணர்வு. அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.


சாம்பியன் ரீஃப் சங்கத்தை பண்டிதர் பாணியிலே பள்ளி, படிப்பகம் என விரிவாக்கினார் அப்பாத்துரையார். பிற கிளைகளில் இல்லாத பவுத்த இளைஞர் கழகம், மகளிர் அமைப்பு உள்ளிட்டவற்றையும் உருவாக்கினார். தன் நண்பர் பி.எம்.ராஜரத்தினத்தின் சித்தார்த்தா அச்சகம் வாயிலாக, அயோத்திதாசரின் நூல்கள் மட்டுமல்லாமல் புத்தர் அருளறம் உள்ளிட்ட வெளியீடுகளையும் கொண்டுவந்தார். 


 அப்பாத்துரையாரின் துணிச்சலான சமூக அரசியல் நடவடிக்கைகளால் தங்கவயலில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் புதிய எழுச்சி உருவானது. அதனால் ஈர்க்கப்பட்ட பெரியார் அவருக்கு நெருக்கமானார். அம்பேத்கர் 'இந்துவாக சாக மாட்டேன்' என அறிவித்த போது, அதை வரவேற்று பவுத்தம் தழுவுமாறு தந்தி அனுப்பினார்.


1954ல் அம்பேத்கர் தங்கவயல் வந்த போது அப்பாத்துரையாரை தேடி சாம்பியன் ரீஃப் பவுத்த சங்கத்துக்கு போனார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு சங்கம், பள்ளி, படிப்பகம் ஆகியவற்றை சுற்றி பார்த்தார். சுமார் 2 மணி நேரம் அப்பாத்துரையாருடன் பவுத்தம் குறித்தும், தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்க செயல்பாடு குறித்தும் பேசினார். 


குறிப்பாக சங்கத்தை உருவாக்கிய அயோத்திதாசர் குறித்து நிறைய கேள்விகள் எழுப்பி இருக்கிறார். அப்போது தான் அப்பாத்துரையாருக்கு புரிந்தது.

அம்பேத்கர் தன்னை மட்டும் தேடிவரவில்லை. தன் குரு அயோத்திதாசரையும் தேடி வந்திருக்கிறார் என்று. அம்பேத்கரின் பணிகள் மீதான நம்பிக்கையின் காரணமாக, அப்பாத்துரையார் சித்தார்த்தா பதிப்பகம் வெளியிட்ட அயோத்திதாசரின் நூல்களை கொடுத்திருக்கிறார். 


அதனை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட அம்பேத்கர், 'நிறைய பேச வேண்டி இருக்கிறது. நான் மீண்டும் ஒருமுறை வருகிறேன்' என சொல்லி விடைபெற்றார். உடல் உபாதை, தங்கவயல் மக்களின் அறியாமை ஆகியவற்றால் அம்பேத்கர்

கடுப்பாக காணப்பட்டார். அந்த நிலையிலும் அவர் கூடுதல் மரியாதையுடனும், பொறுமையாகவும் நடந்து கொண்டது அப்பாத்துரையாரிடம் தான் அருகில் இருந்தவர்கள். அது அயோத்திதாசரை நேருக்கு நேர் எதிர்கொண்டதன் விளைவாக தான் இருக்கும்.


உண்மையில், அம்பேத்கருக்கு இதற்கும் முன்பே அயோத்திதாசரை நன்றாக தெரிந்திருந்தது. தன்னோடு நெருக்கமாக இருந்த தந்தை சிவராஜ், அன்னை மீனாம்பாள் மூலமாக அறிந்திருந்தார். இருவரும் பூர்வீக பவுத்தர்கள். பண்டிதரை நன்கு அறிந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்.


அதே போல அயோத்திதாசரோடு இணைந்து செயல்பட்ட பேராசிரியர் லட்சுமி நரசுவை அம்பேத்கர் அறிந்திருந்தார். அவரின் 'Religion of the Modern Buddhist' நூலை படித்து வியந்த அம்பேத்கர், அந்நூலுக்கு புதிய முன்னுரை எழுதி மறுபதிப்பும் செய்திருக்கிறார். இதை 50 ஆண்டுகளுக்கு பின் அயோத்திதாசர் சிந்தனைகளை தொகுத்த ஞான அலாய்சியஸ் மீண்டும் பதிப்பித்திருக்கிறார்.


அம்பேத்கருடன் இருந்த வசந்த் மூன் எழுதிய 'பாபாசாகேப் அம்பேத்கர்' வரலாற்று நூலில், சென்னையை சேர்ந்த 'ஆபாதி தாஸ்' என்பவரின் பவுத்தம் தொடர்பான நூலை பற்றி எழுத அம்பேத்கர் திட்டமிட்டிருந்தார் என்ற தகவல் வருகிறது. சென்னையில் அந்த காலக்கட்டத்தில் ஆபாதி தாஸ் என்று யாரும் இருக்கவில்லை. அயோத்திதாஸ் என்பதையே வசந்த் மூன் தவறாக எழுதி இருக்கலாம் என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.


இது தவிர அயோத்திதாசரின் கிளைகள் இருந்த ராயப்பேட்டை, பள்ளிக்கொண்டா, ரங்கூன் எல்லா இடங்களுக்கும் அம்பேத்கர் சென்றிருக்கிறார். கடைசியில் அவர் பவுத்தம் தழுவ தேர்வு செய்த நாக்பூரில் கூட அயோத்திதாசரின் கிளை இருந்திருக்கிறது. அதையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.


இதுவரை அயோத்திதாசர் குறித்த அம்பேத்கரின் நேரடி எழுத்துகள் கிடைக்கவில்லை. அதே வேளையில் அவர் மராட்டியத்தில் எழுதி தொகுக்கப்படாமல் இருப்பவற்றை தொகுத்தால் அவை கிடைக்கலாம் என்கிறார் அறிஞர் ஆனந்த் டெல்டும்ப்டே.


ஆக, அம்பேத்கரின் பவுத்தம் நோக்கிய பயணத்தில் அயோத்திதாசர் கலங்கரை விளக்காக இருந்திருக்கிறார் என்பது பல வகைகளிலும் புலனாகிறது.


பண்டிதர் மட்டுமல்ல அவரை பின்தொடர்ந்தவர்களும் தம் லட்சிய பயணத்தை கைவிடாத சாம்பியன்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வாழும் சாட்சி 'சாம்பியன் ரீஃப் பவுத்த சங்கம்!'


இரா.வினோத்

படம்: சந்திரசேகரன் சீதாராமன்

14.5.2020

சனி, 1 மே, 2021

கள்ளழகரும் தல்லாகுளம் சாம்பான்களும்

 மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஷ்வரர் திருமணத்தைக் காண அழகர் மலையில் இருந்து மூலவர் பரம சுவாமி ஆசியுடன்..,பட்டாடை உடுத்தி கையில் வேல் கம்புடன் அழகர் மலையை விட்டு கீழிறங்கி மதுரை பகுதியை நோக்கி வரும் 


கள்ளழகரை வரவேற்று மூன்று மாவடி தல்லா குளம் பகுதியைச் சார்ந்த #சாம்பான்களால் எதிர் சேவை வழிபாட்டு நிகழ்ச்சி மிக சிறப்பாக ஆராவாரத்தோடு கொண்டாடப் பட்டது.




 




 

படங்கள் உதவி 
ஆனஸ்ட்ராஜா சாம்பவர் 

படங்கள் 29-5-2019ல் எடுக்கபட்டது

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பரையர்கள்

 சுதந்திர போராட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட பரையர்கள்


1947ல் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் நடந்த "வெள்ளையனே வெளியேறு,, போராட்டத்தில் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்தனர் ஆங்கிலேய காவல்துறை மற்றும் இராணுவத்திற்கும் மக்களுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் என பலர் கைது செய்யபட்டனர்


 கைது செய்யபட்டவர்கள் பலர் கடுமையாக தண்டிக்கபட்டனர் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யபட்டன 



 அவர்களில் சாம்பவ குலத்தை சேர்ந்த 


மூக்கன் சாம்பான் 


வெள்ளையன் சாம்பான்


சொக்கன்சாம்பான்



  போன்றோரும் குறிப்பிட தக்கவர்கள்

 திருவாடனையை சேர்ந்த 

மூக்கன் சாம்பான் இரண்டு வருடமும், மூப்பையூரை சேர்ந்த  

 சொக்கன்  சாம்பான் 3 வருடம் 2 மாதமும் 15நாட்களும், உறுதி கோட்டையை சேர்ந்த வெள்ளையன் சாம்பான் 7வருடமும் சிறையில் அடைக்கபட்டு கடுமையாக தண்டிக்கபட்டனர்



 தரவுகள் :-

இராமநாதபுரம்  மாவட்டம் வரலாற்று குறிப்புகள்(எஸ்.எம்.கமால்-நா.முகம்மது செரிபு)

சனி, 24 ஏப்ரல், 2021

புதுக்கோட்டை திருவரங்குளம் தேர்த்திருவிழாவும் சாம்பவர்களின் பாரம்பரிய பெருமையும்

 திருவரங்குளத்தில் சாம்பவ/பரையர்கள்  

தேரின் வடம் தொட்டுக் கொடுத்த பிறகே பக்தர்கள் தேரை இழுக்கிறார்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~


  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்ட பெரியநாயகி அம்பான் உடனுறை அரங்குளநாதர் (சிவன்) கோயில். இந்த கோயில் திருவிழா என்றால் பல்வேறு கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்துவிடுவார்கள். அதே போல மற்ற நாட்களை விட தேரோட்டத்திருவிழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் மாவட்டம் முழுவதும் இருந்து வருகிறார்கள்.



  தேரோட்டத்தின் சிறப்பே அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தேரை அலங்காரம் செய்து வைத்த பிறகு வெள்ளை குடைப் பிடித்துக் கொண்டு பக்தர்களுக்கு விபூதி வழங்கிக் கொண்டே ஊர்வலமாக வரும் #சாம்பவர் மக்கள் வந்து தேரின் வடம் தொட்டுக் கொடுத்த பிறகே திரண்டிருக்கும் பக்தர்கள் தேரை இழுத்துச் செல்வார்கள். 


 அப்படித் தான் இன்றும் சாம்வர்கள் தேரின் வடம் தொட்டு கொடுத்த பிறகே தேரோட்டம் தொடங்கி 4 வீதிகளிலும் சுற்றி வந்தது.



    இந்த பழக்கம் காலங்காலமாக உள்ளது. அதனால் இந்த பழக்கத்தை மாற்றமாட்டோம். வழக்கமான முறையிலேயே தேரோட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றனர் பக்தர்கள்.






நன்றி

ஆனஸ்ட்ராஜா சாம்பவர் பட்டுக்கோட்டை



வெள்ளி, 16 ஏப்ரல், 2021

சாம்பவர்களை இழிவு படுத்த போலி செப்பேடுகளை உருவாக்கிய வடுகர்

 

 தெலுங்கு வடுக  செட்டிகள்

  தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பெருமாள் கோவில் சாலை பெத்தனன் செட்டி  என்பவரிடம்  உள்ள செப்பேடு செப்பேட்டில்  மாரியம்மன் கோவிலுக்கு  மதுரையை ஆட் செய்த விசுவநாத நாயக்கர்   இவ்வழியாக வரும் போது இங்கு உள்ள சிவன் மற்றும் புல்வநல்லூர் மாரியம்மனை வனங்கி  மாரியம்மனுக்கு சீதனமாக புல்லை நல்லூரில் 3/1/2 நாழிகை அளவு உள்ள தூரம் வரையிலான நிலங்களை  திருவிழா நடத்தி தாசன் செட்டி மகன் புல்லன் செட்டிக்கு செப்பு பட்டயம் செய்வித்து கொடுத்த செய்தி உள்ளது    

செப்பேட்டில் சத்ரியர்கள்  தெலுங்கு தேச தேசாதிபதிகள் என கூற பட்டு இவர்களுக்கு கட்டு பட்ட சாதிகளாக சில சேவை சாதிகளான வண்ணார் அம்பட்டர் போன்றோரோடு சாம்பான்களையும் சேர்த்து பதிவு செய்திருக்கிறார்கள்

 

சாம்பான்கள் சேவை சாதியா!!


சாம்பான்கள் சேவை சாதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பதையும் சேர சோழ பாண்டியன் என கல்வெட்டில் கூற படும் அரச மரபினர் என்பதற்கு கல்வெட்டுகள் பல உண்டு


  நிலவுடைமை சமுகமாக  சாம்பான்கள் இருந்து பலருக்கு கொடை செய்தற்கு பல சான்றுகள் உன்டு

 ஊற்பறையன் நாராயண சாம்பான்  என படும் நபர் செப்பேடு காட்டபடும் அதே 15ம் நூற்றாண்டுகளிலேயே   ஊர் தலைமைகாரனாக நின்று அதிகாரம் செய்தும் தச்சர்களுக்கு (கம்மாளர்களுக்கு)கொடை  கொடுக்கும் அளவு இருந்த நிலையில்    உற்பத்தி சாதியான சாம்பவர்கள் எப்படி சேவை சாதியோடு சேர்க்கபட்டார்கள் என ஐயம் எழுகிறது   செப்பேட்டை ஆய்வு செய்த தொல்லியல் துறை இது 15ம் நூற்றாண்டு  செப்பேடு இல்லை என்றும்  செப்பேட்டின் எழுத்தமைவு 20ம் நூற்றாண்டு என  பதிவு செய்யபட்டுள்ளது 

 ஆக 20 ம் நூற்றாண்டில் ஒரு செப்பேட்டை  எழுதி 15ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெலுங்கு செட்டிகள் அதில் சாம்பவர்களையும் திரித்து இழிவாக பதிவு செய்துள்ளனர்  தமிழர்களை தமிழ் மண்ணிலேயே இழிவு படுத்த நினைத்த  வடுகர்களின் போக்கு கண்டிக்க தக்கது 

              

வியாழன், 15 ஏப்ரல், 2021

வள்ளுவர் சாதி எனும் உவச்சர்கள்

 வள்ளுவர் யார்?

வள்ளுவர்கள் என தங்களை கொள்ளும் சமுகத்தின் தாங்கள் பிராமணர்களுக்கு முன்பு கோவில்களில் பூஜை செய்ததாக சொல்லிக்கொள்வது உண்டு சில தமிழ் தேசியவாதிகள் துனையோடு



  ஆங்கிலேயர் குறிப்புகளில் வள்ளுவர் கோவில் பணியாளர்கள்  என குறிக்கபட்டுள்ளது 

 

 இதை சான்றாக காட்டி அவர்களின் முக நூல் பக்கத்தில் பதிவு செய்தது




 ஸ்ரீஉவச்சன் பல்லுவன் பூவணவன் ஆறுளிட்டு உவச்ச பணி செய்பவன் என ஆங்கிலேயர் குறித்திருக்கிறார்கள்  


ஆங்கிலேயர் சுட்டிக்காட்டிய கல்வெட்டு தெ.இ.க.தொ:13ல் இருந்து நாம் எடுத்தது படம் ஒன்று அதில் ஸ்ரீ உவச்சன் பல்லுவன்(வள்ளுவன் என இல்லை) பூவணவன் நியதம் ஆறூளிட்டு உவச்ச பணி செய்வான் என குறிக்க பட்டுள்ளது



 கல்வெட்டில் உள்ள செய்தி என்ன வென்றால் உவச்சு பணி செய்பவனுக்கு நிலம் அளிக்கப் செய்தி  


 உவச்சு  பணி என்பது பூசாரி பணி என முகநூலில் பதிவு செய்திருக்கிறார்கள் 


 உவச்சு என்பது கோவிலில் இசைக்கபடும் வாத்திய கருவி


நாம் காட்டியிருப்பது உவச்சு, அதை அறைபவன்/ கொட்டுபவன் உவச்சன் என அழைக்கபட்டான் நாட்டார் வழக்கியலில் இதற்கு தப்பு என்று தெற்கே பெயர் உண்டு இப்போது பறைனு தவறாக பொருள் கொள்ளபடுகிறது ஆக இவர்கள் இரண்டாம் நிலை கோவில் பணியாளர்கள் என்பது மட்டுமே சரியானது


 உவச்சன் பல்லுவன் என உள்ளது உவச்சன் வல்லுவன் என மாற்றம் பெற்றிருக்கலாம் என கருதினாலும் 


  வ(ப)ள்ளுவன் எனபடும் சொற்களை விட உவச்சன் என படும் சொற்களே கோவில் தொடர்பான கல்வெட்டுகளில் அதிகம் கிடைக்கின்றன


ஸ்ரீபலி கொட்டும் உவச்சன் 


திருவாரூர் நீீீடாமங்களம்   திருவீீீராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் வாத்தியம் இசைக்க   பொன்  பெற்ற உவச்சர்

 உவச்சர் வாத்தியம் இசைப்பவர்கள்  குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் கட்டுரை👇

http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2450&id1=50&id2=17&issue=20150131

 இந்த வகையான உவச்சர்கள் 17ம் நூற்றாண்டுகளுக்கு பின்பு கிராம புற கோவில் பூசாரிகளாக பண்டாரங்களை போல்( பண்டாரம்-கருவூலம், பண்டாரம் கருவூலங்களை காவல் செய்யும் மூன்றாம் நிலை பணியாளர்கள்) பணி செய்திருக்க வேண்டும் 


 இவர்கள் அந்தணர் /பூசாரிகள் என்பது ஆதாரமற்ற பரப்புரையாக இருக்கலாம்( தரவுகள் வந்தால் ஏற்போம்)


 

  அப்புரம் மாட்டு எருமை தோளில் உவச்சு செய்யபட்டிருந்தால் மாட்டுக்கறியை புலங்கியவர்கள் இவர்களாக தான் இருக்க வேண்டும் நாங்க ஆச்சாரமானர்கள்னு இந்த பக்கம் திருப்பி விடுதல் தவறு ஏனெனில் தற்போதைய உவச்சர்களும் மேளக்காரர்களும் ஒரே தொழில் செய்தவர்கள் ஒரே உணவு பழக்க வழக்கமும் இருந்திருக்கலாம் 


 உவச்சர் மேளக்காரர் வீரசைவர்(பாரசைவர்- வாத்தியம் இசைப்பவர்கள்) பண்டாரம் யோகீஸ்வர் ஒரே இனக்குழு இதில் தமிழர் கன்னடர் கலப்பு உண்டு 

 

 இவர்கள் பரையர் இணக்குழு என்பதற்கு ஆங்கிலேயர் குறிப்பை தான்டி இதுவரை நான் ஒரு தரவையும் பார்க்கவில்லை ஆங்கிலேயர் குறிப்புகளில் 15,16 நூற்றாண்டு தரவுகளை கூட அவர்கள் காட்டவில்லை


 கடைசியாக கேள்வி இப்படி வரும் அப்போ திருவள்ளுவர்?

 திருவள்ளுவர் என்கிற பேரை மட்டும் வைத்து உரிமை கொண்டாடினால் அடுத்த தலைமுறை வள்ளுவர்கள் நாகை.திருவள்ளுவன்(அருந்ததியர்-தமிழ் புலிகள் அமைப்பு) போன்றோரையும் கூட தற்போதைய வள்ளுவர் சாதி னு சொல்லி கொள்ளும் நிலை உருவாகும்

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

சங்கு பரையன் நக்கீரன்

 சங்கு பரையன் நக்கீரன் 

மதுரை கணக்காயனார் பரையனார் மகனார் நக்கீரனார் 
  




அயோத்திதாசரின் பூர்வ பௌத்தம்

இரா.வினோத் அவர்களின்  அயோத்திதாசரின் பவுத்தம்  பதிவில் இருநது  நான் முதன் முதலாக பவுத்தர்களை சந்தித்தது கோலார் தங்கவயலில் தான். அவர்களை பார்...